News June 14, 2024
உடலை வலுப்படுத்தும் கொள்ளு

கொள்ளு பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள சில பண்புகள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அதே போல இந்த பருப்பில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுவதன் மூலம், அடிக்கடி பசி எடுக்காமல் தடுக்கிறது. நீரழிவு மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கொள்ளு இருக்கிறது.
Similar News
News November 12, 2025
‘மந்தாகினி’ ஆக மிரட்டும் பிரியங்கா சோப்ரா

பிரமாண்டத்திற்கு பெயர்போன ராஜமெளலியின் அடுத்த படைப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. PAN இந்தியா படமாக உருவாகியுள்ள GLOBETROTTER-ல் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக மகேஷ் பாபுவின் கதாபாத்திர அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் 15-ம் தேதி படத்தின் டைட்டில் ரிலீஸ் நிகழ்வு, ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
News November 12, 2025
சந்தேக வளையத்திற்குள் Al-Falah பல்கலைக்கழகம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில், ஹரியானாவின் Al-Falah பல்கலை. சந்தேக வளையத்திற்குள் சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷாஹீன் சயீத், முஸம்மில் ஷகீல் உள்ளிட்ட பல டாக்டர்கள் Al-Falah பல்கலை.-யில் பணியாற்றியுள்ளனர். தீவிரவாத நடவடிக்கைகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் <<18268646>>நிசார்-உல்-ஹசன்<<>> எப்படி பல்கலை.-யில் பணி நியமனம் செய்யப்பட்டார் என்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
News November 12, 2025
சென்னை – விஜயவாடா வந்தே பாரத் நரசபூர் வரை நீட்டிப்பு

சென்னை – விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்று முதல் நரசபூர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 5:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில்(20677), ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா வழியாக பிற்பகல் 2:10 மணிக்கு நரசபூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் 2:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(20678) இரவு 11:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.


