News June 14, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூன் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News March 3, 2026
₹3,200 + ₹3,500 + ₹4,000.. ஸ்டாலின் அறிவித்தார்

மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ₹2,000 வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, *29 லட்சத்து 29 ஆயிரம் முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200 +₹2000 என மொத்தம் ₹3200, *ஐந்து லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500 +₹2000 என மொத்தம் ₹3500, *பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு மொத்தம் ₹4000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
திமுகவில் யார் யாருக்கு ராஜ்யசபா சீட்

கூட்டணி முடிவை இன்றுக்குள் அறிவிக்க காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளது. அப்படி அறிவிக்கவில்லை என்றால், இன்றே ராஜ்யசபா வேட்பாளர்களை திமுக அறிவிக்கவுள்ளது. அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் காங்கிரஸுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் 3-வது வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2026
மீண்டும் எம்பி ஆகிறாரா தம்பிதுரை?

அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக மீண்டும் தம்பிதுரை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா சீட்டுகளில் 2 இடங்கள் அதிமுகவிற்கு கிடைக்கும். இதில் ஒரு ராஜ்யசபா சீட்டை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு (அன்புமணி) கொடுக்கவும், மற்றொன்றில் தம்பிதுரையை களமிறக்கவும் EPS திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


