News June 14, 2024

ஃபெடரர் ஆவணப்படம் எப்போது வெளியாகிறது?

image

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரைப் பற்றிய ஆவணப்படம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. “ஃபெடரர் – 12 இறுதி நாள்கள்” என பெயரிடப்பட்ட அந்தப் படம், இம்மாதம் 20ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபெடரர் 2003 முதல் 2007 வரை 8 விம்பிள்டன், 6 ஆஸ்திரேலிய ஓபன், 5 அமெரிக்க ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன் என 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

Similar News

News September 6, 2025

₹1.50 லட்சம் வரை குறைந்த மகேந்திரா கார்களின் விலை

image

1500 CC க்கு உட்பட்ட கார்களின் GST, 28%-ல் இருந்து 18% -ஆக குறைக்கப்பட்டதால், அதனை மதிப்பிட்டு கார்களின் விலையை மகேந்திரா குறைத்துள்ளது. அதன்படி XUV3XO(₹1.40லட்சம் வரை), XUV3XO (₹1.56 லட்சம்), THAR 2WD (Diesel, ₹1.35 லட்சம்), THAR 4WD (Diesel, 1.01 லட்சம்), Scorpio Classic (1.01 லட்சம்), Scorpio-N (₹1.45 lakh) Thar Roxx(1.33 லட்சம்) என குறைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கார் வாங்கும் ஆசை இருக்கா?

News September 6, 2025

பிரபல நடிகர் காலமானார்.. திரையுலகினர் சோகம்

image

ஹிந்தி மொழியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்ற மராத்தி நடிகர் ஆஷிஷ் வாராங்((55) காலமானார். ‘திரிஷ்யம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கலாபவன் மணி கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்திருந்தார். ‘சூர்யவன்ஸி’, ‘மர்தான்’, ‘ஏக் வில்லன் ரிட்டன்ஸ்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களிலும் ஆஷிஷ் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு அக்‌ஷய் குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News September 6, 2025

CM வெளிநாட்டு பயணம் அரசியல் நாடகம்: தமிழிசை

image

வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தமிழகத்திற்கு கிடைத்துள்ள நன்மை என்னவென்று இதுவரை CM ஸ்டாலின் வெளிப்படையாக சொல்லவில்லை என தமிழிசை சாடியுள்ளார். ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் என்பது வெற்று அரசியல் நாடகம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். செங்கோட்டையன் நீக்கம் குறித்த கேள்விக்கு அது உட்கட்சி விவகாரம் என்றும் திமுகவை எதிர்க்க வலிமையான கூட்டணி அமைக்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!