News June 13, 2024

இளைஞர்களின் பேராதரவோடு மீண்டும் வருகிறார் ‘குணா’

image

‘குணா’ திரைப்படம் வெளியான போது கூட, அப்படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கும், பாடல்களுக்கும் கடந்த தலைமுறை பெரிய வரவேற்பு வழங்கவில்லை. ஆனால், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘குணா’ பட பாடலையும், வசனத்தையும் இன்றைய தலைமுறை ஆரவாரத்துடன் கொண்டாடித் தீர்த்துள்ளனர். இதன் காரணமாக, ‘குணா’ படத்தை வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரீரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Similar News

News September 6, 2025

இந்த விளையாட்டை இந்தியா கண்டுபிடித்ததா?

image

இந்தியாவில் அதிகமாக நேசிக்கப்படும் மற்றும் விளையாடப்படும் ஒன்றாக கிரிக்கெட் உள்ளது. ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்து. அதேசமயம், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுகள் என்னென்னனு உங்களுக்கு தெரியுமா? நீங்க எதிர்பாக்காத பல விளையாட்டுகளை நம்ம ஆளுங்கதான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த விளையாட்டுகள் மேலே வரிசைபடுத்தியுள்ளோம். SHARE IT

News September 6, 2025

ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த விசிகவினர்

image

திருமாவளவனை திமுகவின் கொத்தடிமை என விமர்சித்த ஏர்போர்ட் மூர்த்தியை விசிகவினர் செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிஜிபி அலுவலம் அருகே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் மற்றும் யூடியூபரான ஏர்போர்ட் மூர்த்தியை நடுரோட்டில் வைத்து காலணிகளால் விசிகவினர் தாக்கியுள்ளனர். ஏர்போர்ட் மூர்த்தி திருமாவளவனின் நடத்தை குறித்து அவதூறு பரப்புவதாகவும் விசிகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

News September 6, 2025

தங்கத்தை விட சிறந்த முதலீடு இதுதான்!

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால், அதற்கு பதிலாக ரிஸ்க் அதிகமாக இருந்தாலும் மியூச்சுவல்ஃபண்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் பார்க்கலாம் என நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த கால நிதி தேவைகளுக்கு தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் குழந்தைகளின் படிப்பு & நல்ல வருங்காலத்திற்கு, பணம் இரட்டிப்பாகும் SIP முறையில் MF-களில் முதலீடு செய்வதுதான் தான் நல்லது என்கின்றனர்.

error: Content is protected !!