News June 13, 2024

2ஆவது திருமணம் செய்தார் நடிகை ஸ்ரீதிகா

image

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீதிகா, ‘கோகுலத்தில் சீதை’, ‘மகராசி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இந்நிலையில், ‘மகராசி’ சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆர்யனை காதலித்து வந்த நிலையில், அவரை மறுமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

திருப்பத்தூர்: B.E./B.Tech போதும், ரூ.50,000 சம்பளம்

image

திருப்பத்தூர் மக்களே, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் செப்.21-ம் தேதியே கடைசி நாள். (உடனே SHARE பண்ணுங்க)

News September 11, 2025

ராமதாஸ் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது: கே.பாலு

image

அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை என கே.பாலு தெரிவித்துள்ளார். பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மட்டுமே நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறிய அவர், ராமதாஸ் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணிதான் பாமக தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அவருக்குதான் அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News September 11, 2025

கொசுக்களுக்கு விரும்பிய ரத்த வகை எது தெரியுமா?

image

அனைவரையும் கொசு கடிக்கிறது என்றாலும், ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் குறிவைத்து கடிக்க அவர்களின் ரத்த வகை தான் காரணம் என்பது தெரியுமா? கொசு குறிவைத்து கடிப்பதில் முதல் இடத்தில் ‘O’ வகை பிளட் குரூப்பினரும், 2-வது இடத்தில் ‘B’ வகையினரும் உள்ளனர். இவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் அதிகமாக காணப்படும் லாக்டிக் ஆசிட் கொசுக்களை ஈர்க்கும் மணத்தை கொண்டுள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

error: Content is protected !!