News June 13, 2024
மஞ்சப்பை பயன்படுத்த நடவடிக்கை தேவை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் பெரும்பாலான கடை விற்பனையாளர்கள் பூக்கள், அர்ச்சனை பொருட்கள் மற்றும் இதர தேவைக்கு பிளாஸ்டிக் பைகளையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதை முற்றிலும் ஒழித்து மஞ்சப்பை பயன்படுத்துவதற்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இன்று(ஜூன் 13) கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News July 6, 2025
தி.மலை: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும், ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு (04175 233 381) தொடர்பு கொள்ளுங்கள். *10th முடித்த நண்பர்களுக்கு பகிருங்கள்* <<16962477>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
தி.மலையில் குழந்தை வரம் வேண்டி சிறப்பு பூஜை

தி.மலை, ஆரணி புதுக்காமூர் பகுதியில் உள்ள பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் வரும் ஜுலை 10 ஆம் தேதி பௌவுர்ணமியன்று குழந்தை வரம் வேண்டி சிறப்பு புத்திரகாமேட்டி யாக பூஜை நடைபெறுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக இப்பூஜை நடைபெறுகிறது. இதில், கலந்துகொண்டால் குழந்தை வரம் நிச்சயம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. *உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*