News June 13, 2024
அரசியல் என் குடும்பத்திற்கு தூரமில்லை: கங்கனா

திரைப் பிரபலத்தை விட, அரசியல்வாதியின் வாழ்க்கை மிகவும் கடுமையானது என நடிகையும், எம்.பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், தனது கொள்ளு தாத்தா சர்ஜு சிங் ரனாவத் எம்.எல்.ஏவாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தனது குடும்பத்திற்கு தூரமில்லை எனக் கூறிய அவர், தனது முதல் படமான ‘கேங்ஸ்டர்’ படத்திற்கு பிறகு அரசியலில் சேர நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
கார் வெடிப்பு பின்னணியில் துருக்கி பயங்கரவாதிகளா?

டெல்லி கார் வெடிப்புக்கு துருக்கியில் வைத்து திட்டமிட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதித்திட்டத்தை அரங்கேற்றிய டாக்டர் உமர் மற்றும் கூட்டாளி முசாமில், துருக்கியில் ஜெய்ஸ் இ முகமது ஏஜென்டை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாஸ்போர்ட்டை கைப்பற்றியதன் மூலம் இத்தகவல்கள் கிடைத்துள்ளன. துருக்கி, சில வருடங்களாக பாக்., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
மோடி அரசின் கருவி தேர்தல் ஆணையம்: அப்பாவு

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் SIR பணி நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் வித்தியாசம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலைமையை தவறவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், PM மோடியின் ஆணையை ஏற்று நடக்கும் அமைப்பாக அது மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். பாஜக ஆட்சிக்கு முன்பு ECI எந்த ஒரு சார்பும் இல்லாத அமைப்பாக இருந்ததாகவும் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
News November 12, 2025
உங்களுக்கு மாரடைப்பு வருமா? 2 நிமிடங்களில் அறிய முடியும்

இளம் வயதினரும் மாரடைப்பால் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாரடைப்பு வருவதை முன்னதாகவே அறிய CT Calcium Scoring என்ற வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. சென்னை ஓமந்தூரார் GH-ல் ₹500 செலுத்தி 2 நிமிடங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த மெஷின் எப்படி செயல்படுகிறது, டெஸ்ட் எடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க. SHARE IT.


