News June 13, 2024
ஏ.சி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒருமாத காலம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News September 6, 2025
ஜெர்மனி பயணத்தால் ₹15,516 கோடி முதலீடு: CM ஸ்டாலின்

தமிழ்நாட்டில் EV உற்பத்திக்காக UK-வின் ஹிந்துஜா குழுமம் ₹7,500 கோடி முதலீடு செய்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம், 1000-க்கும் மேற்பட்டவருக்கு வேலை கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், UK & ஜெர்மனி பயணத்தால் மொத்தம் ₹15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News September 6, 2025
நாளை இரவு 9.56 மணிக்கு இதை மிஸ் பண்ணிடாதீங்க

நாளை(செப்.7) இரவு 9.56-க்கு நிகழவுள்ள முழு சந்திர கிரகணம் அதிகாலை 1.31 மணி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ரத்த கலரில் இருக்கும் அந்த நிலவு வானில் வித்தியாசமாக காட்சியளிக்கும். இதை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னை பிர்லா கோளரங்கில் தொலைநோக்கியில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சந்திர கிரகணம் 31.12.2028-ல் தான் நிகழும் என்பதால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.
News September 6, 2025
காலையில் இதை செய்தால் வீட்டில் பண மழை கொட்டும்!

வாஸ்து நம்பிக்கையின்படி, தினமும் காலையில் 5 விஷயங்களை செய்தால் வீட்டில் பணமழை கொட்டுமாம். 1)சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வேலையை தொடங்க வேண்டும். 2)ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு கடவுளை தியானிக்க வேண்டும். 3) படுக்கையை ஒழுங்குப்படுத்த வேண்டும். 4)வீட்டின் நுழைவு வாயிலை சுத்தம் செய்ய வேண்டும். 5)ஜன்னல், கதவுகளை திறந்துவைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இதை செய்தால் செழிப்பான வாழ்க்கை அமையும். SHARE