News June 13, 2024
குவைத் தீ விபத்து புதுச்சேரி முதல்வர் இரங்கல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் வந்துள்ள செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த துயரமான சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அந்த குடும்பங்களைச் சார்ந்தவர்களின் துயரங்களிலும் சோகத்திலும் எனது இதயமும் இணைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
புதுச்சேரி: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோயில் வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 10-கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் வராததால், சட்டப்பேரவையை எம்.எல்.ஏ நேரு நேற்று முற்றுகையிட முயன்றுள்ளார்.
News August 6, 2025
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயங்கள்

புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று பிறக்கும் குழந்தைகளுக்கு நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திர பிரியங்க, தமது சொந்த செலவில் தங்க நாணயங்கள் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News August 5, 2025
புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!