News June 13, 2024

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனை

image

வரும் 15 ஆம் தேதி மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றி உட்பட முப்பெரும் விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவிற்கான மேடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை அமைச்சர் முத்துசாமி அருகில் இருந்து துரிதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயின் உதவியுடன் அப்பகுதியை முழுவதுமாக சோதனையிட்டு வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

கோவை மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <>clip.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News August 16, 2025

கோவையில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி! APPLY NOW

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!