News June 13, 2024
தீ விபத்து குறித்து முதல்வர் ஆலோசனை

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அமைச்சர் மஸ்தானுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவ்விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று மஸ்தான் கூறியுள்ளார். அதே நேரம், கேரளாவில் இவ்விபத்து குறித்து ஆலோசிக்க சிறப்பு சட்டமன்றம் கூடியுள்ளது. 25க்கும் அதிகமான மலையாளிகள் இதில் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Similar News
News March 24, 2026
ராஜபாளையம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்தவர் விஜயன்.மனைவி இசக்கியம்மாள் இருவரும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளை கூலி தொழிலாளர்கள். இரண்டு மாதங்களாக விஜயன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து மனைவி, மகள்கள் கண்டித்ததால் இரவு அவரது வீட்டின் மாடியில் துப்பட்டாவால் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News March 24, 2026
72 hour-க்கு முன் கேன்சல் செய்தால் தான் காசு கிடைக்கும்!

ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கான விதிகளில் IRCTC மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் கட்டணம் திருப்பி தரப்படாது; 8-24 மணி நேரத்துக்குள் கேன்சல் செய்தால் 50% பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே இனி முழு கட்டணமும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 24, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ₹2,720 குறைந்த நிலையில் மாலை ₹2,000 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1 கிராம் தங்கம் ₹12,750-க்கும், 1 சவரன் ₹1,06,000-க்கும் விற்பனையாகிறது. போர் நிறுத்த அறிவிப்பால் நேற்று ஒரே நாளில் 3 முறை மாறிய தங்கம் விலை மாலையில் உயர்ந்தது. பின்னர் இன்று காலை குறைந்த நிலையில், மீண்டும் உயர்ந்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


