News June 13, 2024

ராணுவ பட்ஜெட் நிதியை 19% அதிகரித்த பாகிஸ்தான்

image

நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், அதிலிருந்து மீள IMFவிடம் இருந்து 6-8 பில்லியன் டாலர் கடனை எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு, நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 18.5 டிரில்லியனுக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் 2,100 பில்லியன் மதிப்பு ராணுவ பட்ஜெட் ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 19% அதிகம் ஆகும்.

Similar News

News March 25, 2026

மநீம டார்ச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்: திருமா

image

தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணியை மநீம ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 4% அளவில் உறுதியான வாக்கு வங்கி வலிமையும், தமிழ் சமூகத்தின் நன்மதிப்பும் கொண்ட கமல்ஹாசனை விட்டுவிடாமல் அரவணைத்துக்கொள்ள வேண்டும்; தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ’டார்ச் லைட்’ சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 25, 2026

தக்காளி விலை மளமளவென குறைந்தது

image

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை மளமளவென குறைந்து வருகிறது. குறிப்பாக, 1 கிலோ தக்காளி ₹6 – ₹8-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், சில்லறை கடைகளில் கிலோ ₹10 – ₹12-க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, மகாராஷ்டிராவில் 1 கிலோ தக்காளி ₹4-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விரக்தியில் விவசாயிகள் தக்காளியை சாலைகளில் கொட்டுகினனர்.

News March 25, 2026

நாய்கள் இரவில் ஊளையிட இதுதான் காரணமா?

image

பொதுவாக நாய்கள் இரவில் ஊளையிட்டால், ’அது பேயை பார்த்து குரைக்கிறது’என்று சொல்வார்கள். இது நிஜமென்று பலர் நம்பினாலும், உண்மையில் இது மூடநம்பிக்கைதான். அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, பேய் இருப்பதும் உறுதியாகவில்லை; அது நாய்களின் கண்களுக்கு தெரிவதும் உறுதியாகவில்லை. துணை இல்லாமல் தனிமையில் தவிக்கும் நாய்களின் உளவியல் வெளிப்பாடே இத்தகைய ஊளையிடுதலுக்கு காரணம் என அறிவியலாளர்கள் சொல்கின்றனர்.

error: Content is protected !!