News June 13, 2024
இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தவெக கட்சி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் தவெக போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். 2026 வரை மக்கள் பணி மட்டுமே செய்வோம் என்றும், மக்களும், கட்சி நிர்வாகிகளும் குழப்பிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
எனக்கும் கடன் பிரச்னைகள் இருக்கு: விஜய் சேதுபதி

கோடிகள் சம்பாதிக்கும் தனக்கும் கடன் பிரச்னைகள் உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதற்கான கடன் இருந்தது, லட்சத்தில் சம்பாதித்தபோதும் அதற்கான கடன் இருந்ததாக குறிப்பிட்டார். தற்போது கோடிகளில் சம்பாதித்தாலும் கடன் பிரச்னை தீரவில்லை என்று கூறிய அவர், அதனுடன் வாழ கற்றுக்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
டெல்லி குண்டு வெடிப்புக்காக மேலும் 2 கார்கள்

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் டாக்டர் உமர் அகமது, சதி செயலுக்காக மேலும் 2 கார்களை வாங்கியுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2 கார்களும் எங்கே என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாம் சுவாசிக்கும் காற்றும்.. மாசும்!

நாட்டில் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியாமல் அரசும் திணறி வருகிறது. இந்த நிலையில்தான், இந்திய நகரங்களில், இன்று காலை 6 மணிக்கு நாட்டில் Air quality index எப்படி இருந்தது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. எந்த நகரம் மோசமாக இருந்தது என்பதை பார்க்க, மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள்.


