News June 13, 2024
விடுதி வசதி இல்லாததால் மாணவிகள் தயக்கம்

கோவை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொதுக் கலந்தாய்வு நடந்தது. இங்கு 5 பாட பிரிவுகளில் உள்ள 240 இடங்களுக்கு 6154 விண்ணப்பங்கள் வந்திருந்தன. பி.எஸ்சி கணினி அறிவியல், கணித பிரிவுகளுக்கு கலந்தாய்வு நேற்று நடந்தது. இங்கு விடுதி வசதி இல்லாததால் வெளியூர் மாணவிகளுக்கு சீட் கிடைத்தாலும் வெளியில் தங்கினால் செலவாகும் என்பதால் சேர்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
Similar News
News August 16, 2025
கோவையில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி! APPLY NOW

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 16, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 16, 2025
கோவையில் நீங்களும் ஒரு பேக்கரி ஓனராகலாம்!

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஆக.19, 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி சிறு தொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தை பெருக்க பெரும் உதவியாக இருக்கும். பயிற்சியில் ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் வகைகள் தயாரிக்க தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு: 94885 18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.