News June 13, 2024
T20 WC: இந்திய அணி வெற்றி

அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய அமெரிக்க அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் என்.ஆர்.குமார் 27 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 3 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 50 ரன்களும், ஷிவம் துபே 31 ரன்களும் எடுத்தனர்.
Similar News
News November 12, 2025
2028-க்குள் இந்தியா எங்கயோ போகப்போகுது!

2028-க்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என UBS நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் GDP வளர்ச்சி 2028–2030 நிதியாண்டுக்குள் சராசரியாக 6.5% அளவை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026-ல் இந்தியா உலகின் 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும் என்றும், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 12, 2025
டெல்லி குண்டுவெடிப்புக்கு தலிபான் கண்டனம்

டெல்லி குண்டுவெடிப்புக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு தங்கள் ஆறுதலை தெரிவித்துள்ள அவர்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளனர். இதேபோல் அர்ஜெண்டினா, வங்கதேசம், உக்ரைன், சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகள் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
News November 12, 2025
TVK உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான TVK-வின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 234 தொகுதிகளில் இருந்து பட்டதாரிகள், செல்வாக்கு உள்ளவர்கள், களப்பணியாளர்கள் என வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து, TVK நிர்வாகிகள் தலைமையிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், விஜய் வேட்பாளர்களை நேர்காணல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


