News June 12, 2024
தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை மாதம் பத்தாம் தேதி நடைபெற இருப்பதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பட்டு அறையை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு நிகழ்வும் கணினி மூலமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
பெங்களூரில் இருந்து குட்கா கடத்திய மூவர் கைது

விழுப்புரம் மாவட்டம் எம்.என்.குப்பம் சோதனை சாவடியில் இன்று நடைபெற்ற வாகன தணிக்கையின் போது பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்கீம் மற்றும் நிலேஷ்குமார், தெலுங்கானாவைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய மூன்று பேரை கண்டமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 476 கிலோ குட்கா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 5, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 05) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 5, 2025
விழுப்புரம் மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!


