News June 12, 2024
இந்திய அணி பந்துவீச்சு

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூ யார்க் மைதானத்தில் இன்று 25ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. A பிரிவில் இடம்பெற்றுள்ள IND, USA அணிகள் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்திலும் USA, 2ஆவது இடத்திலும் உள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
Similar News
News September 11, 2025
மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக டாஸை தோற்ற இந்திய அணி, அதன்பின் தொடர்ச்சியாக 15 முறை டாஸை ஜெயிக்கவே இல்லை. இந்த மோசமான சாதனைக்கு UAE-க்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News September 11, 2025
இதை மட்டும் Avoid பண்ணாதீங்க

பிசியாக இருந்தால் அல்லது அடிக்கடி டாய்லெட் செல்ல வேண்டுமே என்ற அலுப்பு காரணமாக, நம்மில் பலரும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும், அதை புறக்கணித்து இருந்து விடுகிறோம். அடிக்கடி இப்படி செய்வதால், சிறுநீர் அழுத்தம் அதிகரிக்கும். இது சிறுநீரக பாதிப்பு, ஸ்டோன், கட்டுப்பாட்டை மீறி சிறுநீர் கழித்தல் போன்றவற்றுக்கு காரணமாகலாம். ஆகவே, இயற்கை உபாதைக்கு உடல் அழைக்கும் போது, உடனடியாக செவி கொடுங்கள்.
News September 11, 2025
அணி மாறி வாக்களித்த திமுக MP யார்?

நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியை சேர்ந்த 15 MP-கள், எதிரணி வேட்பாளருக்கு வாக்களித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், எந்தெந்த கட்சி MP-கள் அப்படி வாக்களித்தனர் என்று ஒரு பட்டியல் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அதன்படி ஆம் ஆத்மி-5, சிவசேனா(UBT)-4, காங்.,-2, திமுக, JMM, RJD, NCP-SP கட்சிகளின் தலா 1 MP-கள் எதிரணிக்கு வாக்களித்துள்ளனராம். அந்த திமுக MP யாராக இருக்கும்?