News June 12, 2024
கோடை உழவு சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

உச்சிப்புளி வட்டார வேளாண்துறை சார்பில் மானாங்குடியில் அட்மா கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு காரிப் (கோடை) பருவ பயிற்சி இன்று நடந்தது. முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், கோடை உழவு, மண் பரிசோதனை, உழவன் செயலி பயன்பாடு குறித்து உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உதவி மேலாளர் பவித்ரன் பேசினர். உச்சிப்புளி வேளாண் வட்டார அட்மா திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
Similar News
News September 12, 2025
அச்சத்தில் ராமநாதபுரம் மக்கள்

ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் உணவிற்காக குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக திரிகின்றன. சில வெறிபிடித்த நாய்கள் மக்களை தாக்குகின்றன.கோழி, ஆடுகளை கடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நாய்கள் தொல்லையால் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் வீட்டை விட்டு வர அச்சப்படுகின்றனர்.உங்க பகுதியில் தெருநாய் அதிகம் உள்ளதா என்பதை SHARE செய்து கீழே பதிவிடுங்கள்.
News September 11, 2025
இராம்நாடு: தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளி சேர்க்கை

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.
News September 11, 2025
ராமநாதபுரம்: பள்ளி வளாகத்தில் கிடந்த தொழிலாளி சடலம்

தொண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி 39. சுமை துாக்கும் தொழிலாளி. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை உள்ளது.2 மாடி கொண்ட அந்த கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு ஹைதர்அலி கீழே விழுந்தார். அவரது உடல் ரேஷன் கடை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிடந்தது.அதிகாலையில் அந்த பக்கமாக சென்ற சிலர் உடல் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.