News June 12, 2024
அஞ்செட்டி பகுதிகளில் மழை: தோன்றி வானவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், இன்று காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேலும், இந்த மழையினால் திடீரென வானில், வானவில் தோன்றியது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
Similar News
News September 11, 2025
கிருஷ்ணகிரியில் இன்று கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏணுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News September 10, 2025
கிருஷ்ணகிரி: காவல் துறை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது இடங்களில் நிறுத்திச் செல்லும் இருசக்கர வாகனங்களில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. திருடர்கள் தற்போது வாகனங்களின் ஸ்டோரேஜ் பெட்டியில் உள்ள பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து திருடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
News September 10, 2025
JUST NOW: கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் செப்.11,12ம் தேதிகளில் வருகை தரவுள்ளதையொட்டி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல்வரின் பயண வழித்தடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் (UAVs) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.