News June 12, 2024
ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசின் சார்பில் மனித உயிர்களை மீட்பவர்களுக்கு “ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள்” வழங்கி வருகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டு விருதிற்கான விண்ணப்பங்கள் http://awards.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து 28.06.2024 மாலை 4.00 மணிக்குள் மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
கீழ்கவரப்பட்டில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

வேலூர்: கணியம்பாடி ஒன்றியம், கீழ்கவரப்பட்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நாளை (ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
News August 22, 2025
வேலூர்: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை!

வேலூர் இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
வேலூரில் பொது இடத்தில் மது அருந்திய 7 பேர் கைது.

வேலூர், காகிதப்பட்டறை பகுதியில் நேற்று (ஆக.21) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கார்த்திக் (32), ஹரிஸ்குமார் (28), ரஞ்சித்குமார் (37), சவுந்தர் (32), சசிக்குமார் (55), விக்னேஷ் (35), மற்றும் ரவி (53) ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர்.