News June 12, 2024

விழுப்புரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூன் 17 வரை விழுப்புரம் கடலூர், திருவண்ணாமலை, சிதம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இந்த தகவலை விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 23, 2025

விழுப்புரத்தில் ஊர்க்காவல் படை பணியிடங்கள் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட கடலோர ஊர்க்காவல் படையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோட்டக்குப்பம் உட்கோட்டப் பகுதியில் உள்ள ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 20 முதல் 45 வயதுக்குட்பட்டவராகவும், குற்றச் செயலிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். ஆக.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 23, 2025

விழுப்புரச்தில் 37 பேருக்கு பணி நியமன ஆணை

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று(ஆக.22) நடந்தது. இதில், 21 நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில், 164 பேர் கலந்து கொண்டதில், 37 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 13 பேர் இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News August 23, 2025

விழுப்புரம்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

கண்டமங்கலம் வட்டாரத்தில் வருகின்ற 23-08-2025 நாளைக்கு சனிக்கிழமை அன்று ஐ.எப்.இ.டி. (IFET) பொறியியல் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் காலை 9-00 மணிமுதல் மாலை 4-00 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கபடும்.

error: Content is protected !!