News June 12, 2024
தென்காசி அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

தென்காசி, வி.கே.புதூர் வட்டத்தில் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் மூலம் தென்காசி ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையின் கீழ் அனைத்து முதல் நிலை அலுவலர்களும் வருகிற 19ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வி.கே.புதூர் சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
Similar News
News September 16, 2025
குற்றாலத்தில் பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி பாஜக தெற்கு ஒன்றியம் சார்பில் குற்றாலம் திரு குற்றாலநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும் அதைத்தொடர்ந்து குற்றாலம் கோவில் அன்னதான கூடத்தில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று குற்றாலம் திருமுருகன் கேட்டுக்கொண்டார்.
News September 15, 2025
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (15.09.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
தென்காசி குறைதீர்க்கும் கூட்டத்தில் 530 மனுக்கள் பெறப்பட்டன

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.15) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டது.