News June 12, 2024
புதுவை: நலத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய திட்டப் பணிகள் மாணவர்களுக்கான உதவித்தொகைகள் உள்ளிட்ட பயன்கள், இந்த நடப்பு நிதியாண்டில் (2024-2025) செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் தகுந்த காலத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Similar News
News August 5, 2025
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

திருக்கனுார் கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு அய்யனாரப்பன் கோவில் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முருகேசன் மீது மோதி, நிற்காமல் சென்றுள்ளது. இதில், படுகாயமடைந்த முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News August 5, 2025
புதுவையில் 182 போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கல்

புதுச்சேரி காவல்துறையில் உள்ள போலீசாருக்கு பல்வேறு கட்ட பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது 32 போலீசாருக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாகவும், 150 போலீசாருக்கு ஏட்டாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
News August 5, 2025
புதுவை: ரயில்வேயில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

புதுவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள டிக்கெட் எழுத்தர், ரயில் கிளார்க், டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 30,000க்கும் மேலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படவுள்ளது. +2 மற்றும் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆக.30 முதல் செப். 29_க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும். ரயில்வே துறையில் பணியில் சேர காத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பை SHARE பண்ணுங்க!