News June 12, 2024
ஆதாரை இலவசமாக புதுப்பிக்க இன்னும் 2 நாள்களே அவகாசம்

ஆதாரில் உள்ள தகவல்களை இலவசமாக திருத்தம் செய்யவும், புதுப்பிக்கவும் வரும் 14ஆம் தேதி வரை UIDAI அமைப்பு கால அவகாசம் அளித்துள்ளது. இந்த அவகாசம் முடிவடைய, இன்னும் 2 நாள்களே உள்ளன. அதன்பிறகு ஆதாரில் தகவல்களை புதுப்பிக்கவோ, திருத்தம் செய்யவோ கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். ஆதலால் இந்த இலவச சேவையை பயன்படுத்தி பயனடையும்படி நாட்டு மக்களை, UIDAI அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News September 10, 2025
சொந்தமா இடம் வாங்குவதற்கு முன் இது முக்கியம்

சொந்தமாக வீட்டு மனை வாங்குவது என்பது பலரின் கனவு. அப்படிப்பட்ட கனவை நனவாக்கும்போது, சில விஷயங்களில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனை வாங்குவதற்கு முன் நீங்க கவனம் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்பதை தொகுத்து வழங்கியுள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை Swipe செய்து தகவல்களை பாருங்கள். SHARE IT.
News September 10, 2025
Like பண்ணுங்க, Share பண்ணுங்க, Comment செய்யுங்க!

சில செய்திகள் உங்களை புன்னகைக்க வைக்கும். சில செய்திகள் கோபப்படுத்தும். வேறு சில செய்திகள், மற்றவர்களுக்கு ஷேர் பண்ண தூண்டும். இப்படி மனதில் தோணும் போது, உடனே அதை வெளிப்படுத்துங்கள். ஆம், உங்களுக்காகவே செய்திகளுக்கு கீழே லைக், டிஸ்லைக், ஷேர், கமென்ட் ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறோம். இவற்றை பயன்படுத்திப் பாருங்கள். அதுசரி, இந்த செய்திக்கு எத்தனை லைக்ஸ் போடப் போறீங்க?
News September 10, 2025
நேபாளில் சிக்கிய இந்தியர்கள்.. IAF விமானங்களில் மீட்க முடிவு

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட வன்முறையால், தலைநகர் காத்மண்டுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், அங்கு 400 இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க, அங்குள்ள இந்திய தூதரகம் ராணுவத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.