News June 12, 2024

மீண்டும் தரமில்லாத ராகி: மக்கள் அதிருப்தி

image

நீலகிரி ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதில் இலவசமாக ஒரு குடும்பத்துக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு மே 3ம் தேதி அரசு துவக்கியது. நீலகிரியில் 4.40 லட்சம் கிலோ தேவை என அறிவித்து பெங்களூருவிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டுவருகிறது. தரமற்ற கேழ்வரகு வழங்குவதால் மக்கள் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தரமற்ற கேழ்வரகு ராகி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Similar News

News December 30, 2025

நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News December 30, 2025

நீலகிரி: 11981 பேருக்கு அதிரடி நோட்டீஸ்!

image

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் S.I.R. படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு, அதற்கான காரணத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் 11981 பேருக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

News December 30, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இதில் அடங்கும். அவசரத் தேவைக்கு பொதுமக்கள் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!