News June 12, 2024
குழந்தை தொழிலாளர் முறை அகற்ற உறுதிமொழி

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி தென்னக ரயில்வே மண்டல பயிற்சி மையத்தில் நேற்று (ஜூன் 11) நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்த வித பணியிலும் ஈடுபடுத்த மாட்டோம் என 300-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Similar News
News September 16, 2025
திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வரும் செப்.21, 28 மற்றும் அக்.5, 12, 19, 26 மற்றும் நவ.2, 9 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து புறப்பட்டு வழக்கமான வழித்தடமான எழும்பூர் வழியை தவிர்த்து, வேலூர், காட்பாடி, திருத்தணி, வழியாக அகமதாபாத் செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. LIKE & SHARE..
News September 16, 2025
திருச்சி: கஞ்சா விற்றவர்கள் அதிரடி கைது

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மெய்யப்பன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .இதேபோல துவரங்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அழகேஸ்வரன், சுபாஷ், கரன், நவநீதகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என திருச்சி மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான செப்டம்பர் மாத குறைதீர் கூட்டம் வரும் செப்.,19ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர் பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.