News June 12, 2024
தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று ₹53,160க்கு விற்ற ஒரு சவரன் தங்கம், இன்று ₹53,440க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,645ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ₹35 உயர்ந்து ₹6,680ஆக விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ₹98.80க்கு விற்பனையாகிறது.
Similar News
News November 12, 2025
நவம்பர் 12: வரலாற்றில் இன்று

*உலக நுரையீரல் அழற்சி நாள். *1927 – மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார். *1927 – ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார். *1927 – வங்கதேசத்தில் போலா புயல் தாக்கியதில் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். *1927 – நடிகை சனம் ஷெட்டி பிறந்தநாள்.
News November 12, 2025
உலகக்கோப்பைக்கு பிறகு என் உலகமே மாறியது: தீப்தி

மகளிர் ODI WC-க்கு பிறகு தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். முன்பு பொது இடங்களில் சென்றால், யாருக்கும் தன்னை தெரியாது. ஆனால், இப்போது மாஸ்க் அணிந்து சென்றாலும், கண்டுபிடித்து தன்னை பாராட்டுகின்றனர். கனவில் இருப்பது போல் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ODI WC-ல் 215 ரன்கள் + 22 விக்கெட்களை எடுத்து, தீப்தி தொடர் நாயகி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
PAK குற்றச்சாட்டு பழைய யுத்தி: இந்தியா

<<18263443>>பாகிஸ்தானில் நடந்த கார் வெடி விபத்துக்கு<<>> இந்தியா தான் காரணம் என அந்நாட்டு PM குற்றஞ்சாட்டியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ள இந்தியா, சொந்த நாட்டு பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப பாக்., மேற்கொள்ளும் பழைய யுத்தி இது என்றும் சாடியுள்ளது. மேலும், இது குறித்த போதிய தெளிவு இருப்பதால், உலக நாடுகள் பாகிஸ்தானின் பொய்யை நம்பமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.


