News June 12, 2024
வெளிநாடு சேர்ந்தவரை தங்க வைக்க C-Form அவசியம்

திருவண்ணாமலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை தங்களது வீடு, தங்கும் விடுதி, ஆசிரமம், போன்ற வளாகங்களில் தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பிரத்யேக இணையதள முகவரியின் பயனாளர் அடையாள எண்ணை தி.மலை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Similar News
News February 8, 2026
தி.மலை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News February 8, 2026
தி.மலை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தி.மலை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள்(ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News February 8, 2026
பர்வதமலை ஏற கடும் கட்டுப்பாடு- அது என்னென்ன?

தி.மலை மாவட்டத்தில் உள்ள பருவதமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1) பக்தர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி. 2) 18 -60 வயதுடையோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 3) ஒரு நாளைக்கு தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 800 பேருக்கு அனுமதி. 4) வரும் முன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்.


