News June 12, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤ சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு
➤ திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் விடுவிப்பு
➤ ஒடிஷா மாநில முதலமைச்சராக பதவியேற்கிறார் மோகன் சரண் மஜி
➤ சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை
➤ ஜனசேனா கட்சி சட்டமன்றக் குழு தலைவராக பவன் கல்யாண் தேர்வு
➤ நடிகர் தர்ஷனுக்கு 6 நாள் போலீஸ் காவல்
Similar News
News November 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 517 ▶குறள்: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். ▶பொருள்: ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
News November 12, 2025
ஏழுமலையான் பக்தர்களுக்கு மெகா அன்னதானம்: அம்பானி

திருப்பதியில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் வகையில், அதிநவீன சமையல் கூடத்தை அமைத்து தர உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான, ஊட்டச்சத்து மிகுந்த பிரசாதத்தை வழங்க தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
இந்தியாவின் துயரத்தில் பங்கேற்ற நாடுகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. 12 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த துயரமான தருணத்தில் இந்தியாவுடன் நிற்பதாக பல உலக நாடுகள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் இஸ்ரேல், இலங்கை, மலேசியா, அயர்லாந்து, சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன.


