News June 12, 2024

இந்தியாவில் கூட்டணி ஆட்சியின் வரலாறு (2/3)

image

இந்திராவின் மரணத்துக்கு பிறகு 1984இல் ராஜீவ் காந்தி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், வரலாறு காணாத வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து 1989இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் வி.பி சிங் தலைமையிலான ஜனதா தள அரசு கூட்டணி அரசை அமைத்தது. அந்த அரசும் 1990இல் கலைக்கப்படவே, சமாஜ்வாடி ஜனதா கட்சியை சேர்ந்த சந்திர சேகர் சில மாதங்கள் பிரதமராக இருந்தார்.

Similar News

News September 10, 2025

ராஜீவ் காந்தி பாணியில் விஜய்?

image

தேர்தல் பரப்புரையை தொடங்கும் விஜய்க்கு, ஆளுங்கட்சியால் பல முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக தவெக குற்றஞ்சாட்டுகிறது. பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் விஜய் தங்குவதற்குகூட அறைகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பிரசாரம் மேற்கொள்ளும் தொகுதிகளில் உள்ள தொண்டர்களின் வீடுகளில் தங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். 1980-களில் ராஜீவ் காந்தியும் இதையே செய்தார். இது விஜய்க்கு கைகொடுக்குமா? கமெண்ட் பண்னுங்க

News September 10, 2025

தேர்தல் வெற்றிக்கு மேஜிக் பண்ண போறோம்: பிரேமலதா

image

2026 தேர்தலில் தான் செய்யவுள்ள மேஜிக், கட்சியினர் அனைவரையும் வெற்றிபெறச் செய்யும் என பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா பேசியுள்ளார். கட்சியை நம்பி வந்த நிர்வாகிகளை அரசு பதவிகளில் கெத்தாக பார்க்கவேண்டும் என கூறிய அவர், பூத் கமிட்டியை முறையாக அமைக்கும் படியும் அறிவுறுத்தியிருக்கிறார். மேலும், ஜனவரியில் கடலூர் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

இன்று மாலை 5 மணி வரை மட்டுமே.. மிஸ் செய்யாதீங்க

image

SC-ன் கட்டாய தகுதித் தேர்வு உத்தரவால், TET தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்.8 உடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருந்ததால், பலரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயற்சிக்கும் போது சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, நீட்டிக்கப்பட்ட கால அவகாசம், இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. உடனே விண்ணப்பியுங்கள்

error: Content is protected !!