News June 12, 2024

ரோஹித் சாதனையை சமன் செய்த ரிஸ்வான்

image

டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற ரோஹித் ஷர்மாவின் (30 அரைசதம் – 118 இன்னிங்ஸ்) சாதனையை ரிஸ்வான் (30 அரைசதம் – 71 இன்னிங்ஸ்) சமன் செய்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 28 அரை சதத்துடன் இந்தப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Similar News

News September 10, 2025

நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை

image

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி, நாளை 4 மாவட்டங்களில் ( தற்போதுவரை) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

GALLERY: ₹2 கோடிக்கு ஏர்போர்ட் லுக்.. அசத்திய ஹர்திக்!

image

வாழ்க்கை ஆடம்பரமாக இருப்பது கிரிக்கெட்டர்களுக்கு சகஜம் என்றாலும், ரசிகர்களுக்கு அது பெரும் ஈர்ப்புதான். அண்மையில், ஹர்திக் பாண்டியா ஏர்போர்ட்டுக்கு அணிந்து வந்த டிரஸ்ஸின் விலை சுமார் ₹2 கோடி இருக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அவர் கையில் அணிந்திருந்த வாட்ச் மட்டும் ₹1.63 கோடி இருக்குமாம். நெட்டிசன்களும், ‘பல்லிறுக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்’ என கிண்டலாக பேசி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News September 10, 2025

சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து சாக வேண்டும்: ஜெகன்

image

ஆந்திர CM சந்திரபாபு நாயுடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் விமர்சித்துள்ள விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால், விவசாயிகள் நாள் முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதைக் குறிப்பிட்டு, ‘இதற்கு CM சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து செத்துப் போவது நல்லது’ என்று ஜெகன் பேசியுள்ளார். ஒரு முதல்வரை இப்படி விமர்சிக்கலாமா?

error: Content is protected !!