News June 12, 2024
பிஷப்பை முட்டாள் என விமர்சித்த பினராயி விஜயன்

அரசை விமர்சித்த முன்னாள் பிஷப்பை கேரள முதல்வர் பினராய் விஜயன் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை மக்கள் புறக்கணித்துள்ளார்கள் என்பதை பினராய் உணர்ந்து செயலாற்றுமாறு முன்னாள் பிஷப் கீவர்கீஸ் கூரிலோஸ் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பினராயி, பிஷப்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என கூறியிருந்தார். எம்.பி தேர்தலில் மொத்தமுள்ள 20 இடங்களில் 19 இடத்தில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது.
Similar News
News September 10, 2025
Tech Tips: கம்மி விலைக்கு iPhone வாங்கலாம்

iPhone 17 வாங்க பணம் இல்லையா? உங்களாலும் குறைந்த விலையில் நல்ல iPhone வாங்கமுடியும். iPhone 17-ஐ ஆப்பிள் Lauch செய்துள்ளதால் பழைய மாடல்களின் விலை குறையும். அதன்படி, ₹55,000-க்கே கிடைக்கும் iPhone 15-ஐ நீங்கள் வாங்கலாம். ஒருவேளை உங்கள் பட்ஜெட் ₹40,000-க்கும் கீழ் இருந்தால் iPhone 13-ஐ வாங்குங்கள். செப்.22-ல் தொடங்கவுள்ள பிளிப்கார்ட் சேலில் இதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 10, 2025
செங்கோட்டையன் புதிய முடிவு.. மீண்டும் அதிமுகவில் பரபரப்பு

அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி வரும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அதிரடி காட்டினார். இதனால், முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டுள்ளதால், அடுத்தகட்ட நகர்வு குறித்து தற்போது ஆலோசனை செய்து வருகிறார். இன்னும் சற்றுநேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பதால், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டின் முன்பு ஆதாரவாளர்கள் குவிந்துள்ளனர்.
News September 10, 2025
தனி ஒருவனுக்கு இன்று பிறந்தநாள்!

குடும்ப ஆடியன்ஸை கவர்ந்த சாக்லெட் பாய் ரவி மோகனுக்கு இன்று பிறந்தநாள். கோலிவுட்டில் பொன்னியின் செல்வன் என்றாலும் ஜெயம், எம்.குமரன் S/o மஹாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் என அண்ணணுடன் கை கோர்த்த போதெல்லாம் பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விட்டார். தற்போது வில்லன், தயாரிப்பாளர், டைரக்டர் போன்ற பல்வேறு பரிணாமங்களிலும் பயணிக்க தொடங்கிவிட்டவரின் படங்களில் உங்களுக்கு பிடிச்சது எது?