News June 11, 2024
விமான நிலையத்தில் இனி பிரஸ் மீட் கிடையாது: அண்ணாமலை

இனி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்குவதற்குள் சில விஷயங்கள் நடந்தது தெரியாமல் போக வாய்ப்புள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு லுக்அவுட் நோட்டீஸ்

₹60 கோடி மோசடி வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்தராவிற்கு எதிராக மும்பை போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தன்னிடம் இருந்து வாங்கிய ₹60 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றியதாக தீபக் கோதாரி என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தம்பதி அடிக்கடி வெளிநாடு செல்வதால், வழக்கு விசாரணை சுமூகமாக நடப்பதற்கு ஏதுவாக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
இந்தியர்களை வம்பிழுத்த USA நிர்வாகி.. இந்தியா சாடல்

மலிவு விலை ரஷ்ய கச்சா எண்ணெயால் பிராமணர்களே பலனடைவதாக டிரம்பின் பொருளாதார ஆலோசகர் நவரோ தெரிவித்த கருத்தை, இந்தியா நிராகரித்துள்ளது. இது பொய்யான தகவல் எனவும், மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் சாடியுள்ளது. மேலும், USA உடனான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, நவரோவின் கருத்துக்கு பாஜகவும், காங்கிரசும் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தன.
News September 5, 2025
BREAKING: பூவை செங்குட்டுவன் காலமானார்

ஆயிரக்கணக்கான சினிமா பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்(90) காலமானார். வயது மூப்பால் சென்னை பெரம்பூரில் இன்று அவரது உயிர் பிரிந்தது. ஏராளமான ஹிட் பாடல்களை இவர் எழுதியுள்ளார். ‘நான் உங்கள் வீட்டு பிள்ளை’, ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ உள்ளிட்ட பாடல்கள் முக்கியமானவை. RIP