News June 11, 2024
மயிலாடுதுறை: அத்தியாவசிய பொருள் வழங்கல்

மயிலாடுதுறை திரு இந்தளூர் ஊராட்சியில் உள்ள பல்லவராயன் பேட்டையில் அமைந்துள்ள சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிட பள்ளியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி மாணவ செல்வங்களுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏ வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு வழங்கினார்.
Similar News
News February 3, 2026
மயிலாடுதுறை: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

மயிலாடுதுறை மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 3, 2026
மயிலாடுதுறை: விபத்தில் ஊராட்சி செயலர் பலி

கொள்ளிடம், மகேந்திரபள்ளி கிராமத்தை சேர்ந்த சரவணன் (46) என்பவர் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். இவர் கொள்ளிடம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News February 3, 2026
மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு!

மயிலாடுதுறையில் நாளை (பிப்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, திருச்சிற்றம்பலம், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, பாண்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!


