News June 11, 2024
தென்காசி சிக்னலில் தேங்கும் மழை

தென்காசி, நடு பல்பு சிக்னலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நின்று செல்கின்றன.இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த சிக்னலில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் நிற்க கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்றி நிரந்தரமாக மழை நீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
Similar News
News August 26, 2025
தென்காசியில் நாளை பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

தென்காசி நகரத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியான காட்டுபாவா நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை நாளை (26/08/25) செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் நகர்மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த நிகழ்வில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
News August 26, 2025
தென்காசி: ரேஷன் கடை குறித்த புகாரா?

தென்காசி: மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04633-212114 எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News August 26, 2025
தென்காசியில் தொடர் 6 நாட்களுக்கு ரயில்கள் ரத்து

தண்டவாள புதுப்பிப்பு பணிகள் காரணமாக, ரயில் எண்.16845 (ஈரோடு – செங்கோட்டை) ஆக. 27-30 வரை ஈரோடு – திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும், ரயில் எண்.16846 (செங்கோட்டை – ஈரோடு) ஆக.28-31 வரை செங்கோட்டை – திண்டுக்கல் ரத்து, மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் 06845/06846 இயக்கப்படும். ரயில் எண்.16848 (செங்கோட்டை-மயிலாடுதுறை) ஆக.28 – செப்.3 வரை சில நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க