News June 11, 2024
49 வயதிலும் இளமையாக காட்சியளிக்கும் தேவயாணி

தமிழில் பிரெண்ட்ஸ், சூரிய வம்சம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள தேவயாணி, உச்சத்தில் இருந்தபோதே இயக்குநர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, 49 வயதாகும் நிலையிலும் இளமையாக அவர் காட்சியளிக்கிறார். திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதைக்கண்ட ரசிகர்கள், தேவயாணியை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
ஆகஸ்ட் 14: வரலாற்றில் இன்று

1947 – பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் விடுதலை பெற்ற நாள்.
1911 – பிரபல ஆன்மிக தலைவர் வேதாத்திரி மகரிஷியின் பிறந்த தினம்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் நடந்த 4 தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைந்த தினம்.
2018 – இத்தாலியில் உள்ள ஜெனோவா நகரில் பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழப்பு.
News August 14, 2025
அரசியல் எதிரிகள் பார்த்த வேலை: தங்கமணி வேதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை இருந்த போதும், திருச்சியில் இபிஎஸ் சுற்றுபயணத்துக்காக தான் கட்சிப்பணி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். தன்னை குறித்து வந்த இச்செய்தியை எண்ணி மனவேதனைப்படுவதாகவும், அரசியல் எதிரிகளின் தவறான தகவல் செய்தியாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News August 14, 2025
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

*சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், அதில் தான் உங்களது வலிமை உள்ளது.
*நீங்கள் மக்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.
*மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.
*உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்.