News June 11, 2024
ஜவுளி பூங்கா அமைக்க அழைப்பு..!

மதுரை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காஅமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநா், மண்டல துணிநூல் துணை இயக்குநா் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை -625 014 என்ற முகவரியில் மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 96595 32005 கைப்பேசி எண்களில் அழைக்கலாம்
Similar News
News September 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (06.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
மதுரை மக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை..!

மதுரை மாநகர காவல் துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அல்லது மேலதிகாரி போல நடித்து ஊழியர்களிடம் அவசரத் தேவைக்காக பரிசு அட்டைகள் வாங்கச் சொல்லவோ பணம் பரிமாறச் சொல்லவோ செய்கின்றனர். அந்நிய எண்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், சந்தேகமான மின்னஞ்சல், செய்திகளை கவனமாக கையாளவும், சந்தேகம் இருந்தால் காவல்துறையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 6, 2025
மதுரையில் மேம்பால பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று மதுரை மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 2100 மீட்டர் நீளத்தில் அப்பல்லோ சந்திப்பு மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.