News June 11, 2024
மின் கட்டணம் உயர்வு என்ற தகவல் வதந்தி

தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது வெளியான செய்தித்தாள் நகல், தற்போது தவறாகப் பரப்பப்படுகிறது எனவும் இந்தாண்டு மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை எனவும், அரசு விளக்கமளித்துள்ளது.
Similar News
News November 11, 2025
BIHAR EXIT POLL: பாஜக கூட்டணி வெற்றி

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ளன. பீப்பிள் பல்ஸ் அறிவித்துள்ள கணிப்பின் படி பாஜக – ஜேடியூ NDA கூட்டணி 133-159 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்ஜேடி-காங்கிரஸின் இந்தியா கூட்டணி 75-101 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. NDA கூட்டணி-46.2%, இந்தியா கூட்டணி-37.9%, ஜன் சுராஜ்-9.7% வாக்குகள் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: ஒரு பார்வை

*மொத்த தொகுதிகள்: 243 (SC-38, ST-2) *மொத்த வாக்காளர்கள் (செப்.30, 2025)- 7.4 கோடி, ஆண் வாக்காளர்கள்-3.9 கோடி, பெண் வாக்காளர்கள்- 3.5 கோடி *தேர்தல் தேதி (2 கட்டங்கள்): நவ.6 & 11 *தேர்தல் முடிவு தேதி: நவ.14 *கடந்த தேர்தல் முடிவு (2020): NDA கூட்டணி (BJP+JDU+)-125 இடங்கள்; INDIA (RJD+CONG+)- 110 இடங்கள்.
News November 11, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை சேர்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டிச.15 முதல் அவர்களுக்கும் ₹1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்னும் 4 நாள்களில் (நவ.15) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முழுவதுமாக நிறைவடையும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்பிறகு, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. அதனால், தகுதியான மகளிர் உடனடியாக முந்துங்க. SHARE IT


