News June 11, 2024
நாமக்கல் கல்லூரியில் பொதுக்கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப் படிப்பு மாணவிகள் சோ்க்கை சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில், 26 மாணவிகள் சோ்க்கை பெற்றனா். வணிகவியல், பொருளியல் துறைகளுக்கு முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு நேற்று திங்கள்கிழமை தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.
Similar News
News August 25, 2025
நாமக்கல்: வங்கியில் கிளார்க் வேலை.. நாளை கடைசி!

நீங்களும் எஸ்பிஐ-யில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு கோவையில் நடைபெறும். விண்ணபிக்க இங்கே <
News August 25, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத முதல் திங்கட்கிழமையையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணியளவில், ஆஞ்சநேயர் சுவாமிக்கு பலவித வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
News August 25, 2025
நாமக்கல்: ரூ.65,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

நாமக்கல் மக்களே, மத்திய அரசின் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் தேசிய அளவில் செயல்படும் 11 ஆலைகளில் காலியாக உள்ள 515 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <