News June 11, 2024
ITK மையம் செயல்படுமா? தன்னார்வலர்கள் தவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ITK என்ற திட்டம் மூலம் பல தன்னார்வலர்கள் இணைந்து மாணவர்களிடம் மாலை நேரங்களில் பாடம் நடத்தி வருகின்றனர். இத்திட்டம் கொரோனா காலங்களில் மாணவர்களிடம் இருந்த கற்றல் இடைவெளியை நீக்க கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முதல் ITK மையம் செயல்படவில்லை பள்ளி திறந்தும் இன்று வரை வகுப்பு நடத்துவதற்கு அனுமதி வரவில்லை என வருத்தத்துடன் கூறி வருகின்றனர்
Similar News
News August 25, 2025
திருவாரூர்: திருமணத் தடை நீக்கும் கோயில்!

திருவாரூர் அடுத்த திருநெல்லிக்காவில் அமைந்துள்ள நெல்லிவனநாதர் கோயில் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு மூலவராக அருள்பாலிக்கும் நெல்லிவனநாதர், திருமணத் தடைகளை நீக்கி, மாங்கல்ய வரம் அருளும் அற்புத தெய்வமாக போற்றப்படுகிறார். இவருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குமென நம்பப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு இத்தகவலை SAHRE பண்ணுங்க..
News August 25, 2025
திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆக.,28-ம் தேதி வியாழக்கிழமையன்று காலை திருவாரூர், மாவட்ட
ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே திருவாரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
திருவாரூர்: கிராம உதவியாளர் பணி-கடைசி வாய்ப்பு

திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <