News June 11, 2024
சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்: சரத் பவார்

மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்போம் என தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். கட்சியின் 25ஆவது நிறுவன தினத்தில் அவர் பேசும்போது, நாடாளுமன்ற தேர்தல் முடிவு மோடிக்கு ஆதரவாக இல்லை என்று கூறிய அவர், மக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக மாறிவிட்டது என்றார். மோடி அரசு, அவர்கள் எண்ணத்திற்கு இனி அரசை நடத்த முடியாது எனவும் கூறினார்.
Similar News
News November 11, 2025
Richest Women Cricketer – இந்தியாவில் 3 பேர்

உலகின் முன்னணி பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் ஆண்களுக்கு நிகராக தங்களது திறமையை செல்வமாக மாற்றுகிறார்கள். இந்தப் பட்டியலில், இந்திய வீராங்கனைகள் 3 பேர், டாப் 10-ல் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அவர்கள் யார், அவர்களது சொத்து மதிப்பு என்ன என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த வீராங்கனை யார்?
News November 11, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹189 ரீசார்ஜ் பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பிளானை பயன்படுத்தி வந்த பிரீபெய்ட் பயனர்களுக்கு இனி ₹199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிளானில் 2 GB data, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 SMS தினசரி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாள்கள். முன்னதாக, ₹189 ரீசார்ஜ் பிளான் இன்டர்நெட் தேவையில்லாத பயனர்களுக்கு வசதியாக இருந்தது.
News November 11, 2025
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை… எப்படி தெரியுமா?

நவம்பரில் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் அரையாண்டு விடுமுறை மொத்தமாக வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.15 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். தேர்வுக்கான அட்டவணையை விரைவில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட உள்ளது.


