News June 11, 2024
தந்தை வகித்த துறையில் மீண்டும் மகன்

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், ஹஜிப்பூர் தொகுதி எம்.பியுமான சிராக் பாஸ்வானுக்கு உணவு பதப்படுத்துதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிராக்கின் தந்தை ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவின் 2014 மற்றும் 2019 ஆட்சி காலத்தில் இதே துறையில் அமைச்சராக பணியாற்றினார். தந்தை அமைச்சராக இருந்த துறையே, சிராக் பாஸ்வானுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவு காரணமாக 2020இல் மறைந்தார்.
Similar News
News November 11, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹189 ரீசார்ஜ் பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பிளானை பயன்படுத்தி வந்த பிரீபெய்ட் பயனர்களுக்கு இனி ₹199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிளானில் 2 GB data, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 SMS தினசரி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாள்கள். முன்னதாக, ₹189 ரீசார்ஜ் பிளான் இன்டர்நெட் தேவையில்லாத பயனர்களுக்கு வசதியாக இருந்தது.
News November 11, 2025
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை… எப்படி தெரியுமா?

நவம்பரில் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் அரையாண்டு விடுமுறை மொத்தமாக வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.15 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். தேர்வுக்கான அட்டவணையை விரைவில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட உள்ளது.
News November 11, 2025
‘ரோடு ஷோ’.. அவகாசம் கோரிய தமிழக அரசு

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான வழக்கில் TN அரசுக்கு 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. TN அரசு ஒரு மாத காலம் அவகாசம் கோரிய நிலையில், மெட்ராஸ் HC நவ.20-ம் தேதி வரை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதில், கட்சிகளுக்கு தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும், 15 நாள்களுக்கு முன்பாக அனுமதி கோரினால் 5-7 நாள்களில் முடிவெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.


