News June 10, 2024
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நாளை (ஜூன்11) முதல் ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான பயிற்சியை ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘எண்ணும் எழுத்தும்’ முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல் ஆகும்.
Similar News
News September 9, 2025
நன்றி.. நன்றி.. முற்றுப்புள்ளி வைத்தார் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், BJP கூட்டணி வெற்றியடைய வேண்டும் என அமித்ஷாவிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்று கூறினார். அப்போது, EPS, கட்சி நடவடிக்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு, நன்றி.. நன்றி.. என கையெடுத்து கும்பிட்டு, சர்ச்சை கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் காரில் வேகமாக சென்றார்.
News September 9, 2025
செங்கோட்டையன் டெல்லி சென்றது இதற்குத் தானாம்!

மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன் என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஹரித்வார் போவதற்கு டெல்லிக்கு புறப்பட்ட தனக்கு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க அனுமதி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். அப்போது, ஆபிஸ், கல்வி நிலையங்கள் செல்வோரின் வசதிக்கேற்ப ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தியதாக தெரிவித்தாா். ஹரித்வார் செல்லாமலேயே அவர் தமிழகம் திரும்பியுள்ளார்.
News September 9, 2025
நேபாளம் பற்றியெரிய இவர் தான் காரணம்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதற்கு வித்திட்டவர் யார் தெரியுமா? சுடன் குருங் என்ற 36 வயது நபர். இளைஞர்களை ஒருங்கிணைத்து ஹமி நேபாள் என்ற NGO-வை நடத்திவரும் இவர், மாணவர்களை திரட்டி போராட்டத்தை தொடங்கினார். சோஷியல் மீடியாவில் தீவிர பிரசாரம் செய்தது ஜென் Z இளைஞர்களை திரட்ட உதவியது. இவருக்கு மேற்கத்திய நிறுவனங்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.