News June 10, 2024
அண்ணாமலை தலைவர் பதவிக்கு ஆபத்து?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வெற்றி வாய்ப்பு குறைந்த மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்களை மாற்ற, டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் தெரிகிறது. தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாத நிலையில், அண்ணாமலையின் தலைவர் பதவியும் பறிபோகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News September 5, 2025
பள்ளிக் கல்வித்துறை பாழடைந்துவிட்டது: அன்புமணி

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் 24 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பணியிடங்களை நிரப்புவதில் அரசு அலட்சியம் காட்டுவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.
News September 5, 2025
சந்திர கிரகணம்.. 5 ராசியினருக்கு எச்சரிக்கை

நாளை மறுநாள்(செப்.7) நிகழும் சந்திர கிரகணத்தால் 5 ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். *ரிஷபம்: உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு. *மிதுனம்: குடும்ப வாழ்க்கையில் நிம்மதி குறையும். *சிம்மம்: தொழில் பார்ட்னருடன் பிரச்னை வரலாம். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். *துலாம்: நிதிநிலை வீழ்ச்சி அடையும். சேமிப்பு குறையும். *கும்பம்: எதிர்பாராத செலவு, விபத்து ஏற்படலாம்.
News September 5, 2025
PHOTO GALLERY: அப்பாவாகும் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி அமரன் விரைவில் அப்பாவாக உள்ளார். சமீபத்தில் நடந்த பிரேம்ஜி மனைவியின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள் தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். தற்போது 46 வயதாகும் பிரேம்ஜி, தன்னுடைய 45-வது வயதில், இந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதுவரை பேச்சிலராக சுற்றி வந்த அவர், திருமணத்திற்கு பின் தீவிர குடும்பஸ்தனாக மாறிவிட்டார்.