News June 10, 2024
திருப்பத்தூர்: ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு துறை சார்ந்த 271 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. உடன் திட்ட முகமை இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் இருந்தனர்.
Similar News
News August 25, 2025
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளது. இதில் தற்போது பெருகி வரும் பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என உங்கள் அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் ஏதாவது தகவல் வேண்டும் என்றால் 1930 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
News August 25, 2025
திருப்பத்தூர்: +2 போதும், ரூ.81,100 சம்பளத்தில் வேலை!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர், ரேடியோ மெக்கானிக் பதவிக்கு 1121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு +2 மற்றும் ITI படித்த 18 முதல் 25 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.25,500-81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் இந்த <
News August 25, 2025
திருப்பத்தூர்: பாலாற்றில் சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் உள்ள பாலாற்றங்கரையில் இருந்து நேற்று (24.08.2025) சாமி சிலைகளை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி வருவாய்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்துறையினர் பாலாற்றில் இருந்து 8 வெவ்வேறு விதமாக 4 அடி கொண்ட பழங்கால சிலைகளை கைப்பற்றினர்.