News June 10, 2024
ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 190 மனுக்களை ஆட்சியர் பெற்றார். இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News November 20, 2024
கடன் பெற ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
News November 20, 2024
கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.
News November 20, 2024
தமிழ்நாடு அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தில் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவதற்கு தகுதியான பட்டியலினத்தை சேர்ந்தோர், இதற்கான விண்ணப்பத்தை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தில் பெற்று நவம்பர் 26 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்