News June 10, 2024
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். முன்னதாக, நேற்று பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்ற நாளில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Similar News
News September 9, 2025
தொடர் ஏறுமுகத்தில் சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 263 புள்ளிகள் உயர்ந்து 81,051 புள்ளிகளிலும், நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 24,847 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. TCS, Bajaj Finserv, Tech Mahindra நிறுவனங்களின் பங்குகள் லாபத்தையும், Tata Motors, Shriram Finance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று நஷ்டத்தையும் சந்தித்துள்ளன. நீங்க வாங்கிய SHARE லாபம் தந்ததா?
News September 9, 2025
துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், துணை ஜனாதிபதி தேர்தல், லோக்சபா & ராஜ்யசபா உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படும். தேர்தலில் போட்டியிடுபவர் 35 வயதை கடந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது 20 பரிந்துரையாளர்கள் & 20 ஆதரவாளர்களின் கையொப்பம் & ₹15,000 வைப்பு தொகையை வேட்புமனுவில் வழங்கியிருப்பார். மெஜாரிட்டி பெறுபவர் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் தேர்வாகிறார்.
News September 9, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.9) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று(செப்.8) சவரனுக்கு ₹720 உயர்ந்த நிலையில், இன்றும் ₹720 என தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், ஒரு சவரன் ₹81,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹140-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,40,000-க்கும் விற்பனையாகிறது.