News June 10, 2024

கால்நடைத்துறை கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் அனக்குடி கிராமத்தில் கால்நடை துறையின் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதனை ஒட்டி கால்நடை துறையின் சார்பில் கால்நடைத்துறை அதிகாரிகளால் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கண்காட்சியில் இயற்கை முறையில் மாடுகளுக்கான மருந்துகள் பற்றி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கண்காட்சி பார்வையிட்டார்.

Similar News

News September 10, 2025

பீர் பாட்டிலால் கொலை செய்ய முயன்றவருக்கு சிறை

image

ஆலிவலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த துரையரசன் என்பருடன் ஏற்பட்ட நில தகராறு காரணமாக ஆபாசமாக திட்டி பீர் பாட்டிலால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவில் கொலை முயற்சி வழக்கில் ரமேஷுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News September 9, 2025

திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 9, 2025

திருவாரூர்: ஆசிரியர் வேலை – நாளையே கடைசி நாள்

image

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!