News June 10, 2024
VIRAL: தாயன்புக்கு ஈடேதம்மா…

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியை அவரது தாயார் ஹீராபென் ஆசீர்வதிப்பது போன்ற எடிட் செய்யப்பட்ட படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2019இல் மோடியின் பதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தபடியே, டிவி.,யில் பார்த்து மகிழ்ந்த அவரது தாயார், 2022இல் மறைந்தார். கடந்த முறை நேரில் சென்று தாயிடம் ஆசி பெற்ற மகனை, இம்முறை தாயே பிரபஞ்சத்தின் வழியே ஆசீர்வதிப்பதாகக் கூறி, இப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
BREAKING: நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக PM மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இரு நாள்கள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றுள்ள PM மோடி நாளை டெல்லி திரும்பியதும், மாலை 5:30 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
ஒரு மரணம்… நிலைகுலைந்து போன 8 பேரின் கனவுகள்!

டெல்லி குண்டுவெடிப்பு, பல குடும்பங்களை சிதறடித்துவிட்டது. தாய், சகோதரர், மனைவி, 4 குழந்தைகளின் கனவுகளை பூர்த்தி செய்து வந்த அசோக் என்பவரை இன்று அக்குடும்பம் இழந்துவிட்டது. பகலில் பஸ் கண்டக்டராக, இரவில் செக்யூரிட்டியாக ஓயாது உழைத்து கொண்டிருந்தவரின் உயிரை குண்டுவெடிப்பு பறித்துவிட்டது. லோகேஷ் என்ற நண்பரை அழைத்து வர சென்ற பயணம், அசோக்கின் இறுதி பயணமாகிவிட்டது. இந்த கண்ணீருக்கு யார் பதில் சொல்வது?
News November 11, 2025
விஜய் கட்சியின் சின்னம்.. நேரில் வழங்கினார்

தவெகவுக்கு பொதுச் சின்னம் கோரும் மனுவை டெல்லியில் உள்ள ECI தலைமை அலுவலகத்தில் CTR நிர்மல்குமார் வழங்கினார். அதில், ECI-ல் ஏற்கெனவே உள்ள ஆட்டோ, விசில், கிரிக்கெட் பேட், சாம்பியன் கோப்பை, கப்பல் ஆகிய சின்னங்களும், தவெக நிர்வாகிகளின் பரிந்துரைகள் மூலம் புதிதாக வரையப்பட்ட 5 சின்னங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவுக்கு உங்க சாய்ஸ் எந்த சின்னம்? கமெண்ட்ல சொல்லுங்க.


