News June 10, 2024
நண்பரின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நாளை மறுநாள் ஆந்திரா முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மனைவி லதாவுடன் டெல்லி சென்ற அவர், இன்று ஹைதராபாத் புறப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியும், சந்திரபாபு நாயுடுவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 4, 2025
நக்சல் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது: அமித்ஷா

இந்தியாவில் நக்சல்களை ஒழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமித்ஷா, 2026, மார்ச் 31-க்குள் நக்சல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என சூளுரைத்தார். மேலும் நக்சல் பயங்கரவாதிகள் சரணடையும் வரை (அ) கைதாகும் வரை (அ) ஒழிக்கப்படும் வரை PM மோடி தலைமையிலான அரசு ஓயாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
News September 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 448 ▶குறள்: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். ▶ பொருள்: குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
News September 4, 2025
சோனியா காந்தி பற்றி மோடி அவதூறாக பேசினார்: தேஜஸ்வி

யாருடைய தாயாரையும் அவதூறாக பேசக்கூடாது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். PM மோடியின் தாயார் பற்றி காங்., கட்சியினர் அவதூறாக பேசியதற்கு எதிராக இன்று NDA கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, சோனியா காந்தி குறித்து மோடி அவதூறாக பேசியதாகவும், நிதிஷ் குமாரின் DNA பற்றி கேள்வி எழுப்பியதாகவும் கூறி சாடியுள்ளார். இது தற்போது விவாதமாகியுள்ளது.